Published : 13 May 2016 09:04 am

Updated : 13 May 2016 09:04 am

 

Published : 13 May 2016 09:04 AM
Last Updated : 13 May 2016 09:04 AM

வாக்களிப்பதில் சிரமமா?

வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கும் நேரத்தில் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் பற்றி வாக்காளர்கள் பலர் தங்கள் அனுபவங்களை ‘தி இந்து’ நாளிதழுக்கு தெரிவித்துள்ளனர். அவற்றில் சில பிரச்சினைகள் பற்றி தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை பெற்றுள்ளோம். பிரச்சினைகளும் அதற்கான விளக்கங்களும் வருமாறு:

மோகனப்பிரியன் - கம்பம்

என் தந்தை ராணுவத்தில் பணியாற்றுகிறார். அவருக்கு ஓட்டு இருந்தும், பணி காரணமாக அவர் ஓட்டு போட முடியவில்லை. அவருக்கு தபால் ஓட்டு உண்டா?

தபால் ஓட்டு வசதி உண்டு. டெல்லியில் உள்ள தமிழக பிரிவு போலீசாருக்கும் இது போன்று தபால் ஓட்டு வசதி வழங்கப்பட்டுள்ளது. தபால் ஓட்டு படிவங்களை உரிய முறையில் கேட்டு பெற்று ஓட்டளிக்கலாம்.

செந்தில் - திருவாரூர்

மின்னணு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதியில் தடுப்பு அட்டை உயரம் குறைவாக இருப்பதால், கையசைவை வைத்து யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை பூத் முகவர்கள் கண்டுபிடித்து விடுகின்றனர். இந்த தேர்தலிலாவது தடுப்பு அட்டையை உயரமாக வைக்க வேண்டும்.

தடுப்பு அட்டையின் உயரம் இந்த அளவில் இருக்க வேண்டும் என, தேர்தல் ஆணையம் விதி வகுத்துள்ளது. அந்த அளவின் படியே தடுப்பு அட்டை வைக்கப்பட வேண்டும். வாக்காளர்களின் இது போன்ற தகவல்கள் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தேர்தலின் போது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆர்.எத்திராஜன் - சைதாப்பேட்டை

எங்கள் வீட்டிலிருந்து வாக்குச்சாவடி வெகுதூரத்தில் உள்ளது. வாக்குச்சாவடி முன் வைக்கப்படும் அறிவிப்பில் தெரு பெயர், வாக்குப்பதிவு அறை உள்ளிட்ட தகவல்கள் தெளிவாக இருக்கவேண்டும்.

கைபேசி எண்ணை பதிவு செய்துள்ள வாக்காளர்களுக்கு, அவர்கள் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து 1950 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால், வாக்குப்பதிவு மையம், சாவடி உள்ளிட்ட தகவல்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. இது தவிர, வாக்குப்பதிவு மையத்தின் முன்பும் தெளிவாக சாவடி உள்ளிட்ட தகவல்கள் வைக்கப்படுகின்றன.

பா.சுபி சுதா - சோளிங்கர்

வாக்குச்சாவடியில் இருக்கும் கட்சிகளின் பூத் ஏஜென்ட்கள் கைபேசியில் எப்போதும் சத்தமாய் பேசிக் கொண்டிருப்பர். இது தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தொல்லையாக இருக்கிறது. வயதான வாக்காளர்களுக்கும் சிரமம் தருவதாக உள்ளது. எனவே, அவர்கள் கைபேசி வைத்திருப்பதை அனுமதிக்க கூடாது.

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தவிர மற்றவர்கள் கைபேசி பயன்படுத்த கூடாது. பூத் ஏஜென்ட்கள் வாக்குச்சாவடிக்குள் கைபேசி எடுத்துச் செல்லக் கூடாது. மீறி வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும்.

கே.நூர்முகம்மது - காரைக்குடி

வாக்குச்சாவடிக்கு 100 மீட்டருக்கு முன்பே வாகனத்தில் வருபவர்கள் இறங்கிச் செல்ல வேண்டும் நிலை இருக்கிறது. அந்த இடத்திலேயே வாக்குச்சாவடி குறித்த தகவல்கள் அடங்கிய தட்டி வைக்க வேண்டும்.

வாக்குச்சாவடி மையத்தின் வெளியில், வாக்குச்சாவடி எண் மற்றும் பகுதி விவரங்கள் அடங்கிய தட்டி வைக்கப்படுகிறது. இதுதவிர, வாக்குசாவடியின் முன், சாவடி எண் விவரங்கள் எழுதி வைக்கப்பட்டிருக்கும்.

எஸ்.விஜயரங்கன் - திருச்சி

எனக்கு வயது 80 ஆகிறது. என் போன்ற வயது முதிர்ந்தோர், மூட்டுவலி உள்ளோர், உடல் ஊனமுற்றோர் ஆகியோர் நீண்ட நேரம் வரிசையில் நிற்க முடியாது. எங்களைப் போன்றோருக்கு தனி வழி அமைத்து தர வேண்டும்.

வாக்குச்சாவடிகளில் ஆண், பெண் தனி வரிசை, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஆகியோருக்கென தனி வரிசை உள்ளது. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சக்கர நாற்காலியும் கிடைக்கும்.

என்.எஸ்.ரங்கநாதன் - திருவாரூர்

இது நல்ல வெயில் காலம். வாக்குச்சாவடியில் 1 மணி நேரமாவது காத்திருக்க வேண்டியுள்ளது. முதலில் வருபவருக்கு டோக்கன் கொடுத்து, அதற்கேற்ப வரிசையில் அழைக்கலாம். காத்திருக்கும் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மூலமாக குடிநீர் அல்லது நீர்மோர் வழங்கலாம்.

தற்போது வாக்காளர்கள் தேர்தல் துறையில் கைபேசி எண்ணை பதிவு செய்திருந்தால், அந்த எண்ணில் இருந்து ‘Q’ என பதிவு செய்து இடைவெளிவிட்டு வாக்காளர் அட்டை எண்ணை பதிவு செய்து 1950 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால், வாக்குச்சாவடியில் எவ்வளவு பேர் வரிசையில் உள்ளனர் என்ற தகவல் வரும். அதை பார்த்து முடிவு செய்து செல்லலாம். காத்திருக்கும் வாக்காளர்களுக்கு வெயில் என்பதால், குடிநீர், காத்திருப்பு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனுபவபூர்வமான உங்கள் சிரமங்களை பதிவு செய்ய...

044-42890011 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாக தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில் உங்கள் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறுமுனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதலின்படி உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

இந்த தடவை சிக்கலின்றி செலுத்துவோம் நம் வாக்கை!

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


வாக்குச் சாவடிநடைமுறை பிரச்சினைகள்வாக்காளர்கள்தி இந்துநாளிதழ்அனுபவங்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author