Published : 08 May 2016 11:25 AM
Last Updated : 08 May 2016 11:25 AM

தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் பெயரில் சுயேச்சைகள்: விஜயகாந்தை எதிர்த்து இருவர்

தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களின் பெயர் கொண்ட சுயேச்சைகள் பலர் களம் காணும் சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. உளுந்தூர் பேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை எதிர்த்து, மேலும் 2 விஜயகாந்த்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.

மேலும் சில பெயர் விளை யாட்டுகள் இதோ: ஆத்தூரில் அமைச்சர் நத்தம் விஸ்வ நாதனை எதிர்த்து மற்றொரு விஸ்வநாதனும், அதே தொகு தியில் திமுக ஐ.பெரியசாமியை எதிர்த்து மற்றொரு பெரிய சாமியும் நிற்கின்றனர். விழுப்புரத் தில் அதிமுக வேட்பாளர் சண் முகம் பெயரில் 5 பேர், ஆலந்தூர் அதிமுக ராமச்சந்திரன், கலச பாக்கம் அதிமுக பன்னீர்செல்வம், அணைக்கட்டு திமுக நந்தகுமார் ஆகியோர் பெயரில் தலா 4 பேர் அந்தந்த தொகுதியில் உள்ளனர்.

திருப்பத்தூரில் அதிமுக வேட்பாளர் உட்பட 3 குமார் களும், பாமக உட்பட 3 ராஜாக் களும் மோதுகின்றனர். தர்மபுரி யில் அதிமுக, தேமுதிக, ஒரு சுயேச்சையின் பெயர் இளங் கோவன். வேடச்சந்துரில் பகுஜன் சமாஜ், பாமக, ஒரு சுயேச்சை யின் பெயர் பழனிசாமி.

ஒரே பெயரில் மூவர்

அதிமுக வேட்பாளர்களான துறைமுகம் சீனிவாசன், திருவள் ளூர் பாஸ்கரன், ஆரணி ராமச் சந்திரன், விக்கிரவாண்டி வேலு, சேலம் மேற்கு வெங்கடாசலம், திருச்செங்கோடு சரஸ்வதி ஆகி யோர் பெயரில், அத்தொகுதி யில் மேலும் இருவர் போட்டி யிடுகின்றனர்.

திமுக வேட்பாளர்களான சைதாப்பேட்டை சுப்பிரமணி, மேட்டூர் பார்த்திபன், ராசிபுரம் துரைசாமி, அரவக்குறிச்சி பழனி சாமி, புவனகிரி சரவணன் ஆகி யோரை எதிர்த்து அதே பெயரில் மேலும் இருவர் உள்ளனர்.

ஊத்தங்கரையில் கொநாமக வேட்பாளர் உட்பட 3 தீர்த்தகிரிகள், ஓசூரில் காங்கிரஸ் வேட்பாளர் உட்பட 3 கோபிநாத்கள், மதுரை தெற்கில் பாஜக வேட்பாளர் உட்பட 3 மகாலெட்சுமிகள், போளூரில் சுயேச்சையாக 3 ஏழுமலைகள், ஆயிரம்விளக்கில் சுயேச்சையாக 3 செல்வம்கள் களத்தில் உள்ளனர். நாகையில் அதிமுக சார்பில் தமிமுன் அன் சாரி, இந்திய கம்யூனிஸ்ட் சார் பில் தமிம் அன்சாரி, சுயேச்சை யாக தமிமுல் அன்சாரி என 3 அன்சாரிகள் உள்ளனர்.

இவை தவிர, 15 தொகுதிகளில் திமுக, 12 அதிமுக, தலா 5 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயரில் மற் றொரு வேட்பாளர் உள்ளார். மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்ட சீனிவாசன், வெங்கடேசன், குமார், 15-க்கும் மேற்பட்ட முரு கன் மற்றும் பாண்டி, 10-க்கும் மேற்பட்ட ஏழுமலை, ரமேஷ், சர வணன், சுப்பிரமணி ஆகிய பெயர்களில் வேட்பாளர்கள் இருப்பது சுவாரஸ்யம். வித்தியாச மாக மேனேஜர் என்ற பெயரில் கிருஷ்ணகிரியில் சுயேச்சையாக ஒருவர் களத்தில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x