Published : 04 May 2022 02:09 PM
Last Updated : 04 May 2022 02:09 PM

தமிழகத்தில் 2021-ல் மட்டும் இ-சேவை மையங்கள் மூலம் 1.55 கோடி சேவைப் பரிவர்த்தனை

சென்னை: தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு மட்டும், இ- சேவை மையங்கள் மூலமாக 1.55 கோடி சேவைப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்கள் மற்றும் பொது மக்களுக்கான பொது இணையதளம் மூலமாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

அதன்படி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் உள்ள 580 மையங்கள் உட்பட பல்வேறு முகமைகளின் கீழ் 10,818 இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இ-சேவை மையங்கள் மூலமாக வருவாய்த் துறையின் கீழ் வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உட்பட 40 சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல சமூக நலன், மகளிர் உரிமைத் துறை உள்ளிட்ட 22 துறைகளின் 130-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, 2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை 6.70 கோடிக்கும் மேலான பரிவர்த்தனைகள் (அதாவது சேவைகள்) இ-சேவை மூலம் நடந்துள்ளன. 2016-ம் ஆண்டு 1,02,91,198, 2017-ம் ஆண்டு 1,12,62,238, 2018-ம் ஆண்டு 1,04,11,812, 2019-ம் ஆண்டு 97,63,563, 2020-ம் ஆண்டு 75,86,335, 2021-ம் ஆண்டு 1,55,64,179, 2022-ம் ஆண்டில் ஏப்ரல் 15-ம் தேதி வரை 21,63,341 என்று மொத்தம் 6,70,42,666 பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக தகவல் தொழில்நுட்ப துறையின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x