தமிழகத்தில் ரூ.112.89 கோடி பறிமுதல்

தமிழகத்தில் ரூ.112.89 கோடி பறிமுதல்
Updated on
1 min read

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவை தேர்தல் நடந்த அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளம், தமிழகம் ஆகிய 5 மாநிலங்களில் நடத்தப் பட்ட சோதனைகளில் அதிகபட் சமாக தமிழகத்தில் ரூ.112 கோடியே 89 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல் துறை நடத்திய சோதனையின்படி கடந்த 15-ம் தேதி வரை ரூ. 79 கோடியே 67 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேபோல் வருமான வரித்துறை யினர் ரூ.33 கோடியே 22 லட்சம் கைப்பற்றியுள்ளனர். இதனடிப் படையில் தமிழகத்தில் மொத்தம் ரூ.112 கோடியே 89 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதே போல் புதுச்சேரியில் ரூ.7 கோடியே 47 லட்சம் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளத்தைவிட தமிழகத்திலிருந்துதான் அதிக ளவில் பணம் கைப்பற்றப்பட் டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in