Published : 04 May 2022 05:51 AM
Last Updated : 04 May 2022 05:51 AM

அதிக சப்தம் எழுப்பும் ஒலிப்பான் பொருத்திய வாகனம் மீது வழக்கு

சென்னை: மோட்டார் வாகன விதிகளுக்கு மாறாக, அதிக சப்தம் எழுப்பும் ஒலிப்பான்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மீது போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் சமீப காலமாக, ஒருசிலர் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் வேன்களில் உள்ள சைலன்சர்களில் அதிக சப்தம் வருமாறு மாற்றம் செய்து ஒலி மாசுவை உருவாக்கி, மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

மேலும், அதிக சப்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் மற்றும் மியூசிக்கல் ஒலிப்பான்களைப் பயன்படுத்தியும் மற்றவர்களுக்கு தொல்லை தருகின்றனர். இவ்வகை விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் சென்னை போக்குவரத்து போலீஸார் நேற்று முன்தினம் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.

இதில், மோட்டார் வாகன விதிகளுக்கு மாறாக காற்று ஒலிப்பான்கள் ஒலிபெருக்கி பயன்படுத்திய வாகனங்கள் மீது 163 வழக்குகளும், மாற்றியமைத்த சைலன்சர் பயன்படுத்திய வாகனங்கள் மீது 103 வழக்குகளும், குறைபாடுள்ள வாகனத் தகடு கொண்டுள்ள வாகனங்கள் மீது 291 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்ற வாகனத் தணிக்கைகள் தொடர்ந்து நடைபெறும். எனவே, வாகன ஓட்டிகள் தங்களது வாகன ஒலிப்பான்கள் மற்றும் பதிவு பலகையை மோட்டார் வாகனச் சட்டத்தின்படி வைத்திருக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரட்கர் அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x