Published : 04 May 2022 06:00 AM
Last Updated : 04 May 2022 06:00 AM

களம்பூர் அருகே பழரசம் குடித்த 2 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு உடல்நிலை பாதிப்பு

ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெண் தொழிலாளர்கள்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் அருகே உள்ள மலையாம்பட்டு கிராமத்தில் வசிப்பவர் குமரேசன். இவரது, விவசாய நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி விவசாயப் பணியில், அதே கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா, பூங்காவனம், ஜெயா, தமிழ்செல்வி, பவுனு, மஞ்சுளா, மாலதி, கவுரி உள்ளிட்ட பெண் தொழிலாளர்கள் 22 நேற்று முன்தினம் பணியாற்றியுள்ளனர்.

பணி முடிந்து செல்லும்போது, குளிர்பானம் வாங்கி கொடுக்க வேண்டும் என நில உரிமையாளர் குமரேசனிடம் தொழிலாளர்கள் கேட்டுள்ளனர். அதன்படி, களம்பூரில் உள்ள குளிர்பான கடைக்கு சென்ற குமரேசனின் மகன் வின்னரசு, 25 பழரசம் வாங்கி வந்துள்ளார். பின்னர், 22 தொழிலாளர்களுக்கு தலா ஒரு பழரசம் கொடுத்துள்ளனர். இதில் 2 பழரசத்தை, விவசாய நிலத்துக்கு வந்திருந்த தொழிலாளி ஒருவரின் உறவினர் மகன் சஞ்சய்(9), மகள் கீர்த்தி(13) ஆகியோருக்கு கொடுக் கப்பட்டுள்ளது.

அதனை, அவர்கள் பருகி யுள்ளனர். மேலும், மீதமிருந்த 3 பழரசத்தை குமரேசன், அவரது மனைவி மகாலட்சுமி, மகன் வின்னரசு ஆகியோர் பருகினர். அதன்பிறகு அனைவரும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், பழரசம் பருகியவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாந்தி, தலைசுற்றல், வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டனர். இரவு முதல் நேற்று காலை வரை ஒருவர் பின் ஒருவராக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட 18 பேரும், மலையாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதில், மிக கடுமையாக பாதிக்கப்பட்ட 13 பேர், ஆரணி அரசு மருத்துவமனைக்கு மாற்றப் பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில், களம்பூர் குளிர்பான கடைக்கு சென்ற உணவு பாதுகாப்புத் துறையினர், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பழரச மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத் துள்ளனர்.

இதையறிந்த களம்பூர் காவல் துறையினர், குளிர்பான கடையை பூட்டி, உரிமையாளரிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x