Published : 01 May 2016 09:52 AM
Last Updated : 01 May 2016 09:52 AM

10 மாவட்டங்களில் கருணாநிதி பிரச்சாரம் ரத்து: மதுரை, சென்னை, திருவாரூரில் மட்டும் பேசுகிறார்

உடல்நிலை காரணமாக திரு நெல்வேலி, வேலூர், கோவை உட்பட 10 மாவட்டங்களில் திமுக தலைவர் கருணாநிதியின் பிரச்சாரம் ரத்து செய்யப் பட்டுள்ளது. மதுரை, சென்னை, திருவாருர் ஆகிய மாவட்டங் களில் மட்டுமே அவர் பிரச்சாரம் செய்கிறார்.

இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘திமுக தலைவர் கருணாநிதியின் தேர் தல் பிரச்சார சுற்றுப்பயணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மே 3-ம் தேதி மதுரை, 5-ம் தேதி சென்னை, 8-ம் தேதி சென்னை தங்கசாலை, 11-ம் தேதி திருவாரூர், 14-ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். திரு வாரூர் தொகுதியில் வேன் மூலம் வாக்காளர்களை சந்திக்கி றார். மற்ற இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசுகிறார்’ என தெரி விக்கப்பட்டுள்ளது.

93 வயதான கருணாநிதி கடந்த 23-ம் தேதி சென்னை சைதாப் பேட்டையில் தேர்தல் பிரச் சாரத்தை தொடங்கினார். அன்று மரக்காணம், புதுச்சேரியிலும் 24-ம் தேதி கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, 25 - திருவாரூர், 26 - தஞ்சாவூர், 27 - திருச்சி, 28 - பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு என 6 நாட்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்.

3 நாள் ஓய்வுக்குப் பிறகு 1-ம் தேதி இரவு ரயில் மூலம் நெல்லை சென்று 14-ம் தேதி வரை 10 மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. இந்நிலையில், உடல்நிலை கார ணமாக 3-ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டத்தில் மட்டுமே பேசுகிறார்.

திருநெல்வேலி, விருதுநகர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ண கிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 10 மாவட்டங்களில் கருணாநிதி யின் பிரச்சாரம் ரத்து செய்யப் பட்டுள்ளது.

கருணாநிதி விளக்கம்

இதுகுறித்து நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கருணாநிதி கூறியிருப்பதாவது:

ஏப்ரல் 23 முதல் 28 வரை 6 நாட்கள் பிரச்சாரம் செய்தேன். இந்த 6 நாட்களும் வேனில்தான் வாசம். ஒவ்வொரு ஊரிலும் மனித சமுத்திரத்தில் புகுந்து குறுகுறுவென நடந்து சிறு கரம் நீட்டி தத்தித் தவழ்ந்து வரும் குழந்தையைப்போல வெளி வந்ததை தொண்டர்கள் அறிவர்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பிரச் சாரத்தை மேலும் விரிவுப் படுத்திக் கொள்வதாகவும், நான் அதிகம் சிரமப்படக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். ஆர்வமும், அக்கறையும் கொண்ட தொண்டர்களின் ஆலோ சனையின்பேரில் எனது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே திட்டமிட்டிருந்த நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்ற சில மாவட்டங்கள் விடுபட்டு போயிருக்கலாம். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு விடுபட்ட ஊர்களுக்கு நிச்சயம் நேரில் வருவேன் என உறுதி அளிக்கி றேன். உங்களில் நானும், என்னுள் நீங்களும் ஐக்கியமாகி இருக் கிறோம் என்ற உணர்வுடன் நான் வராததை வந்ததாகவே கருதி திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x