மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம் எப்படி அமையப்போகிறது? - ‘அனிமேஷன் வீடியோ’ தயார் செய்த நெடுஞ்சாலைத் துறை

மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம் எப்படி அமையப்போகிறது? - ‘அனிமேஷன் வீடியோ’ தயார் செய்த நெடுஞ்சாலைத் துறை
Updated on
1 min read

மதுரை: மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் அமைக்க திட்டமிடப்பட் டுள்ள புதிய மேம்பாலத்துக்கான ‘அனிமேஷன்’ வீடியோவை நெடுஞ்சாலைத்துறை தயார் செய்து இருக்கிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் கோரிப்பாளையத்தில் மேம்பாலம் அமைக்கும் திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிந்து கோரிப்பாளையத்தில் மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை வரைபடம் தயாரித்து தமிழக அரசின் அனுமதிக்காக அனுப்பியிருக்கிறது. அரசு ஒப்புதல் வழங்கியதும் திட்ட மதிப்பீடு தயார் செய்து டெண்டர் விடப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கோரிப்பாளை யம் மேம்பாலம் எப்படி அமையப் போகிறது என்ற அனிமேஷன் வீடியோவை நெடுஞ்சாலைத் துறை தயார் செய்து இருக்கிறது. அது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கோரிப்பாளையம் மேம்பாலம் தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகில் தொடங்கி, ஏவி மேம்பாலத்தில் முடிவடைகிறது. இந்த பாலத்திலிருந்து செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு செல்வதற்காக மட்டும் இணைப்பு பாலம் ஒன்றும் அமைகிறது.

இந்தப் பாலம் எப்படி அமையப்போகிறது என்பதை ஒரு அனிமேஷன் வீடியோவாக தயார் செய்து இருக்கிறோம். அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகே அந்த வீடியோ, வரைபடத்தை வெளியிடுவோம். தற்போது கோரிப்பாளையம் உயர்மட்ட மேம்பாலம் அரசின் பரிசீலனையில் மட்டுமே உள்ளது. ஆனால், ஒப்புதல் வழங்குவதற்காகத்தான் அந்த திட்டத்தை கேட்டுள்ளனர். நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட மற்ற அடிப்படைப் பணிகள் நிறை வடைந்துவிட்டதால் அரசு ஒப்புதல் கிடைத்ததும், திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் டெண்டர் விட்டு பணிகள் தொடங்கப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in