Published : 02 May 2022 04:07 PM
Last Updated : 02 May 2022 04:07 PM

அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா, ஹேக்கத்தான், கோடை சிறப்புப் பயிற்சி முகாம்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா, ஹேக்கத்தான் உள்ளிட்ட பல்வேறு புதிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை வரும் கல்வியாண்டில் 12-க்கும் மேற்பட்ட புதிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அவர் அறிவிப்பு முன்னெடுப்புகள் பின்வருமாறு:

* மாதந்தோறும் பெற்றோர் – ஆசிரியர்- மாணவர் சந்திப்பு

* பல்வேறு திறன்களை ஊக்குவிக்க கலைத் திருவிழா மற்றும் விளையாட்டு போட்டிகள்

* திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உலக,இந்திய, மாநில அளவில் கல்விச் சுற்றுலா

* கோடை விடுமுறையில் மலை சுற்றுலாத் தளங்களில் கோடைக் கொண்டாட்ட சிறப்புப் பயிற்சி முகாம்கள்

* இணையப் பாதுகாப்பு மற்றும் Ethical Hacking இல் பயிற்சி அளிக்கப்பட்டு மாநில அளவிலான ஹேக்கத்தான் போட்டிகள்

* பள்ளிதோறும் காய்கறித் தோட்டங்கள்

* சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடல்

* மண்டல மாநில அளவில் சாரண சாரணியர் முகாம்கள் நடத்தப்படும்.

* மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’, ’தேன் சிட்டு’, ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர்’ இதழ்கள் வழங்கப்படும்.

* அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x