இலங்கைக்கு உதவ அனுமதி: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்.
மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: இலங்கை மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி என மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கை மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக மத்திய அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், ”இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தனிப்பட்ட முறையில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மனிதாபிமான செய்கை அனைவராலும் பெரிதும் வரவேற்கப்படும் மற்றும் நாடுகளுக்கு இடையே புரிதல் மற்றும் நல்லுறவை மேம்படுத்த உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அனைத்துத் துறைகளிலும் நல்லெண்ணம் வளரட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in