Published : 09 May 2016 09:00 AM
Last Updated : 09 May 2016 09:00 AM

தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி: சோழிங்கநல்லூரில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் - அரசு மருத்துவமனை அமைக்கப்படும் என்று வாக்குறுதி

தமிழகத்திலேயே அதிக வாக்காளர் களை கொண்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.

இந்த தொகுதியில் உள்ளகரம், புழுதிவாக்கம், மாடம்பாக்கம், பள்ளிக்கரணை, நாராயணபுரம், பெருங்குடி, கொட்டிவாக்கம், பால வாக்கம், நீலாங்கரை, ஒக்கியம் துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல் உள்ளிட்ட பகுதி கள் அடங்கியுள்ளன. வன்னியர் கள், தாழ்த்தப்பட்டவர்கள் அதிகம் வசிக்கும் இத்தொகுதியில் மீனவர் கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பிராமணர்கள் மற்றும் இதர வகுப் பினரும் வசித்து வருகின்றனர்.

இந்த தொகுதியில் ஐடி நிறு வனங்கள், தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. பெருங் குடி குப்பை கிடங்கும், மிகப் பெரிய சதுப்புநிலப் பகுதியும் அமைந்துள்ளன. கிழக்கு கடற் கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் பொழுது போக்கு மையங்கள், பண்ணை வீடுகள் நிறைய இருக்கின்றன. சோழிங்கநல்லூர் தொகுதியின் முக்கிய அடையாளமாக ஐடி நிறு வனங்கள் திகழ்கின்றன. தமிழகத் திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்க நல்லூர் உள்ளது. இங்கு ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 2 ஆயிரத்து 772 பேரும், பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 99 ஆயிரத்து 573 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 62 பேரும் என மொத்தம் 6 லட்சத்து 2 ஆயிரத்து 407 வாக்காளர்கள் உள்ளனர்.

இத்தொகுதியில் அதிமுகவில் என்.சுந்தரம், திமுகவில் எஸ்.அரவிந்த் ரமேஷ், ம.ந.கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆர்.பன்னீர் தாஸ், பாமகவில் கே.ராம்குமார், பாஜக கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் உஜகர் சிங், நாம் தமிழர் கட்சி யில் எஸ்.ராஜன் மற்றும் சுயேச்சைகள் உட்பட 15 பேர் போட்டியிடுகின்றனர். கடும் வெயில் காரணமாக வேட்பாளர்கள் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் பிரச்சாரம் செய்து மக்களை சந்தித்து வருகின்றனர்.

கண்ணகி நகர் பகுதியில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த அதிமுக வேட்பாளர் என்.சுந்தரம் கூறும்போது, “அதிமுக அரசின் கடந்த 5 ஆண்டுகால சாதனை களையும், மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களையும் சொல்லி வாக்கு சேகரித்து வருகிறேன். சோழிங்கநல்லூரில் அரசு மருத்துவ மனை கட்டப்படும். சோழிங்க நல்லூர் சிக்னலில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறேன். பிரச்சாரத்தின் போது மக்களின் ஆதரவு அமோக மாக இருக்கிறது. அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்றார்.

செம்மஞ்சேரியில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த திமுக வேட்பாளர் எஸ்.அரவிந்த் ரமேஷ், “சோழிங்கநல்லூர் தொகுதியில் போக்குவரத்து நெரிசல் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததால் சோழிங்க நல்லூர் சிக்னல், துரைப்பாக்கம் சிக்னல், மேடவாக்கம் சிக்னல் மற்றும் எஸ்ஆர்பி டூல்ஸ் சிக்ன லில் மேம்பாலம் கட்டப்படும். குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் விரைவாக முடிக்கப்படும் என்று வாக்குறுதி களை கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறேன். மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள்” என்றார்.

பெருங்குடி, கல்லுக்குட்டை, கந்தன்சாவடி பகுதியில் நேற்று காலை 10 மணிக்கு வாக்கு சேகரித் துக் கொண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆர்.பன்னீர்தாஸ் கூறும்போது, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வியை இலவசமாக தருவோம். டாஸ்மாக் கடைகள் மூடப்படும். குடிசை வீடுகள் அனைத்தையும் மாடி வீடுகளாக மாற்றுவோம். வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்பதை சொல்லி வாக்கு சேகரித்து வருகிறேன். எனக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கிறது. மற்றுக் கட்சியினர் பணம் கொடுத்து ஆட்களை அழைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். எங்களுடன் பிரச்சாரத்துக்கு வருபவர்கள் அன்பால் தானாகவே வருகின்றனர்” என்றார்.

மேடவாக்கம், பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகர் பகுதியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த பாமக வேட்பாளர் கே.ராம்குமார், “சோழிங்கநல்லூர் பகுதியில் மேம்பாலங்கள் கட்டப்படும். பழு தடைந்த சாலைகள் சரிசெய்யப் படும். நீர்நிலைகள் சுத்தம் செய் யப்படும்.

ஒரு கி.மீ. தூரம் இடை வெளியில் இலவச நவீன கழிப் பறைகள் கட்டப்படும். கணவரை இழந்த மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு சுயமாக தொழில் தொடங்க நிதி வழங்கப்படும் என்ற வாக்குறுதி களை தெரிவித்து வாக்கு சேகரித்து வருகிறேன். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். எனக்கு மக்களிடம் சிறப்பான ஆதரவு இருக்கிறது” என்றார்.

துரைப்பாக்கம் பகுதியில் நேற்று காலை 9 மணிக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.ராஜன் கூறுகையில், “50 ஆண்டுகாலம் ஆட்சி செய்த திமுக, அதிமுக கட்சிகள் தமிழகத்தை நாசம் செய்துவிட்டன. கடந்த 50 ஆண்டுகளாக செய்யாததை, அடுத்த 5 ஆண்டுகளில் செய் யப்போகிறார்களா?. மற்றவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பணத்தை செலவு செய்து டிவிகள் மற்றும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து வருகிறார்கள். அவர் களை மக்கள் நம்ப மாட்டார் கள். பிரச்சாரத்தின் போது மற்றக் கட்சியினர் கைகளை மட்டும் காட்டி விட்டு செல்கின்றனர். ஆனால் நான் மக்களிடம் நின்று பேசு கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x