'கோடை வெயிலால் கோமா நிலைகூட ஏற்படக்கூடும்..' - ஆளுநர் தமிழிசை விழிப்புணர்வு ட்வீட்

'கோடை வெயிலால் கோமா நிலைகூட ஏற்படக்கூடும்..' - ஆளுநர் தமிழிசை விழிப்புணர்வு ட்வீட்
Updated on
1 min read

சென்னை: உடல் உஷ்ண தாக்கத்தால் கோமா நிலைக்குக் கூட செல்லலாம் என்று தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநரும், மருத்துவருமான தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் வெப்ப நோய்களிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளையும் அவர் விளக்கி ட்வீட் செய்துள்ளார்.

நாடு முழுவதும் கோடை வெப்பம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கோடை வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோடை வெயிலால் ஏற்படும் உடல் உஷ்ண தாக்கத்தால் கோமா நிலைக்குக் கூட செல்லாம் என்று தெலங்கானா மற்றும் புதுக்சேரி ஆளுநரும், மருத்துவருமான தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ``அளவுக்கதிகமான வியர்வை, நாக்கு மற்றும் தோல் வறட்சி ஏற்படுதல், மனக்குழப்பம், பேச்சுக்குழறுதல், தலை சுற்றல், மயக்கம், வலிப்பு நோய் போன்றவற்றால் நினைவிழந்து கோமா போன்ற ஆபத்தான நிலைக்குச் செல்லலாம்.

மெல்லிய பருத்திநூல் மற்றும் கதர் ஆடைகள் அணிவது, தண்ணீர் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 3 லிட்டர் அருந்துவது, அதிக வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்ப்பது, இணை நோய் உள்ளவர்கள், முதியவர்கள், குழந்தைகள் வெயிலில் செல்வதைத் தவிர்ப்பது ஆகியவற்றால் இதைத் தடுக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in