Published : 02 May 2022 04:35 AM
Last Updated : 02 May 2022 04:35 AM
சென்னை: சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102.50 உயர்ந்து, ரூ.2,508.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலைமேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்குநிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இதில் பெட்ரோல், டீசல்விலை தினந்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் எரிவாயு விலைமாதத்துக்கு 2 முறை என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது.
இதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான 19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.101 அதிகரித்து சிலிண்டர் விலை ரூ.2,234.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கான வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன. இதன்படி, 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.103.50 குறைக்கப்பட்டது. மீண்டும் கடந்த மார்ச் மாதம் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.268.50 ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை நேற்றுரூ.102.50 அதிகரித்து ரூ.2,508.50 ஆகஉள்ளது. ஏற்கெனவே, பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் வண்டிவாடகைக் கட்டணம் அதிகரித்துள்ளதால் உணவுப் பொருட்களின் விலை ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்து வருவதால் உணவகங்கள், தேநீர் கடைகளில் உணவுப் பொருட்கள் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT