அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசுக்கு அனுமதி: ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம்

அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசுக்கு அனுமதி: ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம்
Updated on
1 min read

சென்னை: இலங்கை மக்களுக்கு தமிழகத்தின் சார்பில் அரிசி, மருந்து, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப அனுமதியளித்து, முதல்வர் ஸ்டாலினுக்குமத்திய அமைச்சர் ஜெய்சங்கர்கடிதம் அனுப்பியுள்ளார்.

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், தவிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் முதல்கட்டமாக அரிசி, மருந்து, பால்பவுடர் என ரூ.123 கோடிக்கு அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்ப அனுமதியளிக்கக் கோரி அரசினர் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தின் உதவிக்கு அனுமதியளித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எழுதிய கடிதம்:

இலங்கை மக்களுக்கு தமிழக அரசின் மனிதாபிமான உதவிகள் குறித்து நாங்கள் இலங்கை அரசை கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் வாயிலாக தொடர்பு கொண்டபோது நாடுகளுக்கு இடையிலான உதவிகள் அடிப்படையில் நிவாரணத்தை பெற்றுக்கொள்ள சம்மதித்தது. இதையடுத்து, நிவாரணப் பொருட்கள் குறித்த விரவங்களை மத்திய அரசுக்கு தெரிவிக்கும்படி கடந்தஏப்ரல் 29-ம் தேதி தமிழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது.

எனவே, தாங்கள் தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தி, மத்திய அரசுடன் இணைந்து இலங்கை மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in