Published : 17 May 2016 08:24 AM
Last Updated : 17 May 2016 08:24 AM

232 தொகுதிகளிலும் அமைதியாக நடந்தது சட்டப்பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் 73.76 சதவீத வாக்குப்பதிவு

அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 88.50 சதவீதம் | சென்னை துறைமுகத்தில் 55.27 சதவீதம்

தமிழகத்தில் 232 தொகுதி களிலும் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அமைதியாக நடந்தது. மாநிலம் முழுவதும் சராசரியாக 73.76 சதவீ த வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 88.50 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை துறைமுகம் தொகுதியில் 55.27 சதவீத வாக்குகளும் பதிவாகின.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் மே 16-ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித் தது. இதைத் தொடர்ந்து தமிழகத் தில் உள்ள 234 தொகுதிகளி லும் 66,007 வாக்குச்சாவடிகள் அமைத்து வாக்குப்பதிவை நடத்த தமிழக தேர்தல்துறை ஏற்பாடுக ளை செய்து வந்தது. இந்நிலையில் , அதிக அளவு பணப் பட்டுவாடா புகார் தொடர்பாக அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அந்த 2 தொகுதிகளுக்கும் வரும் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, 25-ல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 232 தொகுதி க ளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 232 தொகுதிகளிலும் மொத்தம் 65 ஆயிரத்து 486 வாக்குச்சா வடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் தொகுதிக்கு 2 அல்லது 3 என மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இம்முறை தேர்தலில் மாற் றுத்திறனாளிகள், மகளிருக்கான பிரத்யேக வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

26 ஆயிரத்து 961 வாக்குச்சா வடிகளில் இணைய கேமரா, 10 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமரா வசதி செய்யப் பட்டிருந்தது. இதன்மூலம் வாக்குப்பதிவை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தங்கள் அலுவலகத் தில் இருந்தபடி கண்காணித்தனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பணியில் இருந்தனர்.

பொதுமக்கள் ஆர்வம்

இந்த தேர்தலில் 232 தொகுதி களிலும் 2 கோடியே 86 லட்சத்து 36 ஆயிரத்து 54 ஆண்கள், 2 கோடியே 90 லட்சத்து 92 ஆயி ரத்து 751 பெண்கள், 4 ஆயிரத்து 702 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 5 கோடியே 77 லட்சத்து 33 ஆயிரத்து 507 பேர் வாக்க ளிக்க தகுதி பெற்றி ருந்தனர். 3,728 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியபோது, பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடியில் காத்திருந்தனர். வாக்குப்பதிவு தொடங்கியதும் சில இடங்களில் மட்டும் மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக அவை சரிசெய்யப்பட்டன. சில இடங்களில் மாற்றப்பட்டன.

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் முதல்வர் ஜெய லலி தா, கோபாலபுரம் சாரதா உயர் நி லைப் பள்ளியில் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

மழையால் பாதிப்பு

இதற்கிடையே, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்தது. சில மாவட்டங் க ளில் மழை அதிகமாக பெய்ததால், வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருவாரூர், வேதாரண்யம் தொகுதிகளில் முதல் 2 மணி நேரத்தில் சுமார் 5 சதவீத வாக்குகளே பதிவாகின.

இதையடுத்து, பலத்த மழை பெய்த மாவட்டங்களில் வாக்குப்ப திவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணை யத்திடம் கோரிக்கை விடுத்தன. இதை பரிசீலித்த ஆணையம் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டியதில்லை என தெரி வித்தது. அந்த மாவட்டங்களின் வாக்குப்பதிவு நிலவரம் அடிப்ப டையில் இவ்வாறு அறிவித்திருப் பதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரி வித்தார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் தேர்தல் ஆணைத்தால் வெளியிடப்பட்டது. இறுதி நிலவரப்படி 73.76 சதவீத வாக்கு கள் இந்த தேர்தலில் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். அதிகபட்சமாக பாலக் கோடு தொகுதியில் 88.50 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை துறைமுகம் தொகுதியில் 55.27 சதவீத வாக்குகளும் பதிவாகின.

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு இயந்திரங்கள் அனைத் தும் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 68 வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத் துச் செல்லப்பட்டன.

அங்கு 5 அடுக்கு பாதுகாப் புடன் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை 19-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கு கிறது. பிற்பகலுக்குள் முடிவு தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x