100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உறுதி

சாத்தூர் அருகே உள்ள என்.சுப்பையாபுரத்தில் மே தினத்தை முன்னிட்டு நடந்த கிராமசபைக் கூட்டத்தில்  பேசிய அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்.
சாத்தூர் அருகே உள்ள என்.சுப்பையாபுரத்தில் மே தினத்தை முன்னிட்டு நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்.
Updated on
1 min read

சாத்தூர்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதி யத்தை உயர்த்தவும், வேலை நாட்களை அதிகரிக்கவும் நட வடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சாத்தூர் அருகே உள்ள என்.சுப்பையாபுரத்தில் நடந்த மே தின சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

அப்போது, 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதியத்தை உயர்த் துவதோடு, வேலை நாட்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாகவும் உறுதி அளித்தார்.

பின்னர், உப்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுப் பணித்துறை சார்பில் சுமார் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் கூடுதல் கட்டிடத் துக்கு பூமி பூஜையை அமைச் சர் தொடங்கிவைத்தார். சமத்துவபுரத்தில் குடியிருப் போருக்கு வீடு பராமரிப்புத் தொகையாக ரூ.50 ஆயிரம் வீதம் 72 பேருக்கு வழங்கினார். நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் புல்வாய்க்கரை ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி கலந்துகொண்டு ஊராட்சிப் பகுதி களில் நடந்துவரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரநாச்சியார்புரம் மற் றும் மேலப்பாட்டகரிசல்குளம் ஊராட்சிகளில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொது மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in