

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 48 வேட்புமனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன. அதில், 33 மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன. 15 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் கந்தசாமி, அவருக் கான மாற்று வேட்பாளர் முருகேசன், தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் ஆகியோரது வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. போதிய ஆவணங்கள் இணைக் கப் படாததும், முறைப்படி பூர்த்தி செய்யப்படாததுமே அவர்களின் மனுக்கள் தள்ளுபடிக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தொகுதியில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.