ஆலந்தூர் தொகுதியில் ஒரே பெயரில் 4 வேட்பாளர்கள்

ஆலந்தூர் தொகுதியில் ஒரே பெயரில் 4 வேட்பாளர்கள்
Updated on
1 min read

ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 13 பேர் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசனும் போட்டியிடுகின்றனர். தேமுதிக, பாமக, பாஜக, நாம் தமிழர், கொங்கு மக்கள் தேசிய கட்சி, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர, 5 வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். இரு பிரதான கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அதிமுக சார்பில் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். சுயேச்சை வேட்பாளர்களாக சி.ராமச்சந்திரன், மு.ராமச்சந் திரன், வ.ராமச்சந்திரன் என ஒரே பெயரில் 4 வேட்பாளர்கள் இருப்பதால் வாக்காளர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

‘‘ஒரே பெயர்கள் இருந்தாலும் வேட்பாளர்களுக்கான சின்னம் தனித் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அவர்களின் இன்ஷியலும் வேறாக இருப்பதால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பு இல்லை’’ என தேர்தல் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in