

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே நல்லவன்பாளையம் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை ஒரு தரப்பினர் புறக்கணித்து, திருவண் ணாமலை - தண்டராம்பட்டு சாலை யில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறும் போது, ‘‘கிராம சபைக் கூட்டம் நடத்துவது குறித்து கிராம மக்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. ஊராட்சியில் அடிப்படை வசதிகள் மேற்கொள் ளப்படவில்லை. மேலும், கிராம சபை கூட்டத்துக்கு அதிகாரிகள் வரவில்லை. அதேபோல், தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவுப்படி, ஊராட்சியின் வரவு -செலவு அறிக்கையை மக்களின் பார்வைக்கு வைக்கவில்லை” என அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டினர்.
இதுப்பற்றி தகவலறிந்த திருவண்ணாமலை காவல் துறையினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது.
நெடுங்குணம் ஊராட்சி
பெரணமல்லூர் ஒன்றியம் நெடுங்குணம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் சகுந்தலா வேலாயுதம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சித்ரா சிவக்குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.
ஒன்றியக் குழு துணைத் தலைவர் லட்சுமி லலித வேலன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
மேலும் குழந்தைகளுக்கு எதிரான செயல்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து 1098 என்ற எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், சுற்றுச்சூழலை பாது காக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து, மஞ்சள் பையை பயன்படுத்துவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காரியந்தல் ஊராட்சி
துரிஞ்சாபுரம் ஒன்றியம் காரியந்தல் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி சிறப்புரையாற்றினார். ஊராட்சி களின் உதவி இயக்குநர் லட்சுமி நரசிம்மன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், முழு சுகாதாரத் திட்டம், கிசான் திட்டம், ஊட்டச்சத்து இயக்கம், நமக்கு நாமே திட்டம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்து விவாதிக் கப்பட்டன. மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என எடுத் துரைக்கப்பட்டது.