

மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவின்போது மதுரைக்கு சென்று வந்த தற்காலிக 39 தள்ளும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். இதில் முதல் கட்டமாக 20 உண்டியல்கள் திறந்து கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் எண்ணப்பட்டன.
இதில் ரூ.75 லட்சத்து 11 ஆயிரத்து 574 ரொக்கம், தங்கம் 10 கிராம், வெள்ளி 347 கிராம் காணிக்கையாக வரப்பெற்றது.
காணிக்கை எண்ணும் பணிக்கு கோயில் துணை ஆணையர் தி.அனிதா தலைமை வகித்தார். இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உதவி ஆணையர் கரு ணாகரன் முன்னிலை வகித்தார்.