Last Updated : 23 May, 2016 11:29 AM

 

Published : 23 May 2016 11:29 AM
Last Updated : 23 May 2016 11:29 AM

காங்கிரஸ் கோட்டை திருவாடானையை 36 ஆண்டுக்கு பின் கைப்பற்றிய அதிமுக

காங்கிரஸின் கோட்டையான திருவாடானை தொகுதியை 36 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக கைப்பற்றி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம் ஆகியற்றை அதிமுகவும், முதுகு ளத்தூர் தொகுதியை காங்கிரஸூம் கைப்பற்றியுள்ளன.

திருவாடானை தொகுதியில் அதிமுக சார்பில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் நடிகர் கருணாஸ், தற்போதைய எம்எல்ஏவு ம் முன்னாள் அமைச்சருமான சுப.தங்கவேலனின் மகன் திவாகரன் திமுக சார்பில் போட்டியிட்டார். மேலும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியன் உட்பட 21 பேர் போட்டியிட்டனர். இருப்பினும் அதிமுக, திமுக இடையே கடும்போட்டி நிலவியது.

தொகுதிக்கே அறிமுகம் இல்லாத கருணாஸ் வெற்றி பெற முடியாது, இங்குள்ள அதிமுகவினர் அவருக்கு சரியாக தேர்தல் பணியாற்றவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அதிமுகவினர் சுறுசுறுப்பாக பணியாற்றியும், பணப்பட்டுவாடா செய்தும், கருணாஸை 8,696 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனர்.

இத்தொகுதியில் 2011-ம் ஆண்டு வரை நடைபெற்ற 14 தேர்தல்களில் 1980-ல் மட்டும் அதிமுக சார்பில் போட்டியிட்ட அங்குச்சாமி வெற்றி பெற்றார். அப்போது எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். 1977 மற்றும் 1980-க்கு பிறகு தொடர்ந்து 6 முறை என காங்கிரஸ் 7 முறை வெற்றி பெற்றுள்ளது. இதில் 1989 முதல் தொடர்ந்து 5 முறை காங்கிரஸைச் சேர்ந்த கே.ஆர்.ராமசாமி அம்பலம் வெற்றி பெற்றுள்ளார்.

தொகுதி சீரமைப்பின்போது இவரது சொந்த ஊரான தேவகோட்டை ஒன்றியம் காரைக் குடி தொகுதியில் சேர்க்கப்பட்டது. அதனால் அவர் திருவாடானை தொகுதியை கைவிட்டு, காரைக்குடி தொகுதிக்கு மாறினார். இவர் இருக்கும் வரை இங்கு யாரும் வெற்றி பெற முடியாது என்ற நிலை இருந்தது.

அதன் பிறகு முன்னாள் அமைச் சர் சுப.தங்கவேலன், கடலாடி தொகுதி கலைக் கப்பட்டதால் இத்தொகுதிக்கு மாறினார். அவர் 2011-ல் போட்டியிட்டு வெற்றி பெற் றார். அதிமுக அலைவீசிய அந்த தேர்தலிலும் அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் முஜபுர்ரகுமான் வெற்றி பெற முடியவில்லை.

தற்போது 36 ஆண்டுகளுக்குப் பிறகு கருணாஸ் வெற்றி பெற்ற தன் மூலம் அதிமுக மீண்டும் இத்தொகுதியை கைப்பற்றி ள்ளது. இது ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x