தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் பற்றி புகார் அளிக்கலாம்

தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் பற்றி புகார் அளிக்கலாம்
Updated on
1 min read

தேர்தல் தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் மே 16-ம் தேதியன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு உறுதி செய்யும் வகையில், வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி படி தேர்தல் தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்.

மேற்கண்ட தினத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிப்பது தொடர்பாக புகார்கள் தெரிவிக்க வசதியாக மாநில மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அறைகள் தொழிலாளர் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூடுதல் விவரங்கள் அறிய www.labour.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். அல்லது 044-24321438 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in