

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாதந் தோறும் இரு முறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் கடந்த 8-ம் தேதிக்குப் பிறகு, நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை தலைமை வகித்தார். உதவி ஆணையர்கள் ரத்தினவேல் பாண்டியன், வெங்கடேஷ் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் கலந்து கெண்டனர். உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கடந்த 8-ம் தேதி எண்ணப்பட்ட உண்டியல்களில் இருந்து ரூ.1,47,90,943 கிடைத்தது. 2-வது முறையாக தற்போது எண்ணப்பட்ட நிரந்தர உண்டியல் கள் மூலம் ரூ.52,80,720-ம், மேலகோபுர திருப்பணி உண்டியல் மூலம் ரூ.10,81,354-ம், கோசாலை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.1,75,742-ம், யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.87,332-ம், கோயில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.18,90,625ம், சிவன் கோயில் அன்னதான உண்டி யலில் ரூ.16,312ம், நாசரேத் கோயில் உண்டியல் மூலம் ரூ.2,044-ம், கிருஷ்ணாபுரம் அன்னதான உண்டியல் மூலம் ரூ.5,248-ம், குலசை அறம் வளர்ந்த நாயகி கோயில் உண்டியல் மூலம் ரூ.2,518-ம் என மொத்தம் ரூ.85,41,896 கிடைத்துள்ளது. ஏப்ரல் மாததத்தில் இரண்டு முறை உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூ. 2,33,32,839 காணிக்கையாக கிடைத்துள்ளது.
மேலும், தங்கம் 1,925 கிராம், வெள்ளி 51 ஆயிரத்து 65 கிராம் மற்றும் 62 வெளிநாட்டு நோட்டுகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.