

சென்னை: தமிழகத்தில் வேலூர் மற்றும் கரூர் பரமத்தியில் 106 டிகிரி வெயில் பதிவானது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகப் பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி,வெப்பச் சலனம் காரணமாக, ஏப்.30-ம் தேதி (இன்று) மேற்குத்தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், அதை ஒட்டிய ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரிமாவட்டங்களில் ஓரிரு இடங்களில்இடி, மின்னலுடன் லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும்.
நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக
வேலூர் மற்றும் கரூர் பரமத்தியில் 106 டிகிரி திருச்சி, திருத்தணியில் தலா 105, சேலம், ஈரோட்டில் தலா 103, தருமபுரியில் 102, மதுரையில் 101, பாளையங்கோட்டையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.