Published : 05 May 2016 08:31 AM
Last Updated : 05 May 2016 08:31 AM

அதிமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியாக வாய்ப்பு

அதிமுக தேர்தல் அறிக்கை நாளை (6-ம் தேதி) வெளியாக வாய்ப்புள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, அதை வைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கடந்த மாதம் 9-ம் தேதி சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கினார். ஆனால், அக்கட்சி சார்பில் இதுவரை தேர்தல் அறிக்கை வெளியிடப்படவில்லை.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு படிப் படியாக அமல்படுத்தப்படும் என்று பிரச்சாரத்தில் ஜெய லலிதா பேசி வருகிறார். மேலும், ‘நீங்கள் கற்பனைகூட செய்ய முடியாத பல திட்டங்களையும் செயல்படுத்துவேன்’ என்று கூறி வருகிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா அதிரடியாக வெளியிடுவார் என்று அக்கட்சியினர் கூறி வந்தனர்.

இந்நிலையில், இன்று ஈரோடு மாவட்டம் பெருந் துறையில் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கும் ஜெய லலிதா, 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப் படுத்தி அவர்களுக்காக வாக்கு சேகரிக்கிறார். நாளை தனது சொந்த தொகுதியான ஆர்.கே.நகரில் வீதி வீதியாக வேனில் சென்று வாக்கு சேகரிக்கிறார். நாளை அமா வாசை என்பதால், பிரச்சாரத் துக்கு செல்லும் முன்பு, காலை யில் அதிமுக அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறும் போது, ‘‘மற்ற கட்சிகளைவிட வித்தியாசமாக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள் ளது. பொதுவான அறிவிப்புகள் தவிர, தொகுதிவாரியாக அறி விப்புகள் வெளியாகின்றன. வாக்காளர்கள் மத்தியில் இந்த அறிவிப்புகள் நல்ல வரவேற்பை பெறும். அறிக்கை வெளியானதும் அதை வைத்து வேட்பாளர்கள் பிரச்சாரம் தீவிரமடையும்’’ என்றார்.

தேர்தல் அறிக்கையை தயாரிக்க தமிழக முன்னாள் தேர்தல் அதிகாரி ஒருவர் உதவியதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x