Published : 30 Apr 2022 10:44 AM
Last Updated : 30 Apr 2022 10:44 AM
உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் கோடைவெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் தட்பவெட்ப நிலை உயர்ந்து, அனல் வீசியதால் உள்ளூர் மக்கள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக உதகை புறநகர் பகுதிகளான பிங்கர் போஸ்ட், காக்கா தோப்பு, பட்பயர், ஹெச்பிஎப் பகுதிகளில் ஆலங்கட்டி மழைபெய்தது. சாலைகள் மற்றும் தோட்டங்களில் பனிக்கட்டிகள் தேங்கின. இவற்றை மக்கள் வியப்புடன் சேகரித்து, விளையாடினர். ஆலங்கட்டி மழையால் தோட்டங்கள் வெண்மையாக காட்சியளித்தன. சிறிது நேரத்தில் ஆலங்கட்டிகள் கரைந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT