Published : 30 Apr 2022 06:10 AM
Last Updated : 30 Apr 2022 06:10 AM

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படாததற்கு அதிமுக தான் காரணம்: கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றச்சாட்டு

சிங்கம்புணரி: தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படாததற்கு 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக தான் காரணம் என்று சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கார்த்தி சிதம்பரம் எம்.பி. முகாமை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, கவுன்சிலர் தாயுமானவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள் இணைந்து வட்டார அளவிலான சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துவது நல்ல முயற்சி.

எம்பியால் தொழிற்சாலை களை கொண்டு வர பரிந்துரை தான் செய்ய முடியும். மாநில அரசு தான் முயற்சி எடுக்க வேண்டும். தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படாதது குறித்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவிடம் தான் கேட்க வேண்டும். தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தொழில்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

சமூகவலைதளங்களில் வரும் வீடியோக்களை பார்க்கும்போது, பள்ளி மாணவர்கள் நடந்து கொள்ளும் முறை ஒழுங்கீனமாக உள்ளது.

மாணவர்களை கண்டிப்ப தோடு, கவுன்சலிங்கும் கொடுக்க வேண்டும். பெற்றோரை அழைத்துப் பேச வேண்டும். இதுபோன்று நடக்காமல் இருக்க கல்வித் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x