

திண்டிவனம் (தனி) தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் உதயக்குமார் போட்டியிடுகிறார். இவர் நேற்று மதியம் புதுச்சேரியிலிருந்து மரக்காணத்துக்கு காரில் சென்றுள்ளார்.
அப்போது அனுமந்தை பகுதியில் உள்ள இசிஆர் டோல்கேட்டில் வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ் தலைமையிலான பறக்கும்படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
தேமுதிக வேட்பாளர் உதய குமார் வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ.3 லட்சம் பணம் இருந்துள்ளது. இதற்கு எவ்வித ஆவணமும் இல்லாததால் பறக்கும்படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து திண்டிவனத்தில் உள்ள கருவூல அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.