Last Updated : 21 May, 2016 05:35 PM

 

Published : 21 May 2016 05:35 PM
Last Updated : 21 May 2016 05:35 PM

கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது நெல்லை மாவட்டத்தில் அதிமுக பின்னடைவு

திருநெல்வேலி மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை அதிமுகவுக்கு பின்னடைவே ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 2011 தேர்தலில் பாளையங்கோட்டை தொகுதியில் மட்டுமே திமுக வெற்றிபெற்றிருந்தது. அதிமுக 6 தொகுதியிலும், அதன் கூட்டணி கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சி 2, தேமுதிக ஒரு தொகுதியில் வெற்றிபெற்றிருந்தன.

தற்போதைய தேர்தலில் 5-ல் அதிமுகவும், 3-ல் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தலா ஒரு இடத்திலும் வெற்றிபெற்றிருக்கின்றன.

ராதாபுரம் தொகுதி

திருநெல்வேலி மாவட்டத் தில் ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் மு.அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத் தில் தோல்வியைத் தழுவினார். நடுநிலைப்பள்ளி தலைமையாசிரி யர்கள் கையெழுத்திட்ட 300 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்ததால் அவர் இத்தோல்வியை சந்திக்க நேர்ந்தது. இதனால் நீதிமன்ற த்தை நாடவுள்ளதாக அவர் தெரி வித்துள்ளார்.

அம்பாசமுத்திரம்

தொகுதியில் முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் இத் தொகுதியில் 3-வது முறை யாக தற்போது தோல்வியை சந்தித் திருக்கிறார். நாங்குநேரியில் எச்.வசந்தகுமார் 2-வது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார். இத்தொகுதியில் போட்டியிட்ட பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளர் சுரேஷ், அவர் சார்ந்த சமுதாய வாக்குகளை கணிசமாக பிரித்த தால், அதிமுகவுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் சிதறின.

பாளையங்கோட்டை

பாளையங்கோட்டையில் டி.பி.எம். மைதீன்கான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சென்னையில் கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி வீட்டு முன் அக்கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் வேட்பாளர் மாற்றப்படவில்லை. அதேசமயம், அதிமுக தரப்பில் வேட்பாளர் மாற்றப்பட்டார். ஆனால், 4-வது முறையாக மைதீன்கான் வெற்றிபெற்றார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி தொகுதியில் கடந்த 2006-ல் 600 வாக்குகள் வித்தியாசத்தில் நயினார்நாகேந்திரன் தோல்வி அடைந்திருந்தார். அதேபோன்று, இம்முறை 601 வாக்குகள் வித்தியாசத்தில் நயினார் நாகேந் திரன் மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளார். திமுக ஏ.எல்.எஸ்.லட்சுமணன் வெற்றி பெற்றிருக்கிறார்.

வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரத்தால், அவர் சார்ந்த சமுதாய வாக்குகள் இம்முறை அதிமுகவுக்கு முழுவதுமாக கிடைக்கவில்லை என கூறப் படுகிறது.

சென்டிமென்ட் தகர்ந்தது

தமிழகத்தில் 1952 முதல் 2011 வரை நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் திருநெல்வேலி தொகுதியில் வெற்றிபெற்ற கட்சியே ஆட்சி அமைத்துள்ளது. ஆனால், இம்முறை அந்த சென்டிமென்ட் தகர்ந்துவிட்டது. திருநெல்வேலியில் திமுக வெற்றிபெற்றுள்ள நிலையில், அதிமுக ஆட்சி அமைந்திருக்கிறது.

6 பேர் புதுமுகங்கள்

ராஜலட்சுமி (சங்கரன்கோவில்), மனோகரன் (வாசுதேவநல்லூர்), செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி), ஐ.எஸ்.இன்பதுரை (ராதாபுரம்), ஏ.எல்.எஸ்.லட்சுமணன் (திருநெல்வேலி), முகம்மது அபுபக்கர் (கடையநல்லூர்)ஆகியோர் சட்டப் பேரவைக்கு புதுமுகங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x