

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். சோனியா, ராகுல் காந்தியின் பிரச்சாரம் திமுக கூட்டணிக்கு மேலும் பலம் சேர்க்கும். மதவாத பாஜகவை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். எனவே, வரும் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது. தமிழகத்தில் மோடி அலை எதுவும் வீசவில்லை. எனவே, பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சாரத்தால் பாஜகவுக்கு எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.