Published : 17 May 2016 09:00 AM
Last Updated : 17 May 2016 09:00 AM

முதல்முறையாக வாக்களித்த இளைய தலைமுறையினர் என்ன நினைக்கிறார்கள்?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த வாக் காளர்கள் சிலர் தங்கள் கருத்து களை பகிர்ந்துகொண்டனர்.

ஹெச்.சையது சுபேர் (19), துணி வியாபாரம், ராயப்பேட்டை: ஓட்டுப் போடுற மக்களுக்கு இவரு நல்லது செய்யிற வேட்பாளரான்னு பாத்துதான் ஓட்டு போட்டேன். இந்தப் பகுதியில எப்பவுமே டிராபிக் ஜாம் ஆகும்.அது மாதிரி நல்ல குடிதண்ணீரும் கிடைக்கிறதில்லே. இதுங்களை போக்குற மாதிரியான திட்டங்களை இவரால கொண்டு வர முடியும்னு நான் நினைச்சுத்தான் என்னோட ஜனநாயகக் கடமையை செஞ்சிருக்கேன்.

எம்.பவித்ரா (22), திருவல்லிக்கேணி: வேட்பாளரின் எளிமை மற்றும் அவர் தொகுதிக்கு ஆற்றியுள்ள பணிகளை கருத்தில் கொண்டு வாக்களித்தேன்.கட்சிகளின் விளம்பரத்தை வைத்து வாக்களிக்கவில்லை.

எஸ்.விபின் சாய்நாத் (20), சிவில் என்ஜினியரீங் படிக்கும் மாணவர், மந்தைவெளி: முதலில் ஊழல் செய்யாதவராக இருக்கணும்.ஊழலுக்குத் துணை போகாதவராகவும் இருக்கணும். இன்றைக்கு விவசாயம் சீரழிஞ்சுப் போயிருக்கிறது.அதைச் சீர்படுத்தி விவசாயிகளுக்கான நல்ல பல திட்டங்களைத் தீட்டுகிற ஆட்சி வர வேண்டும்.அத்தகைய கட்சியை சேர்ந்த வேட்பாளருக்கே என் முதல் வாக்கினை செலுத்தினேன்.

வி.பிரியங்கா (22), பல் மருத்துவம் படிக்கும் மாணவி, மயிலாப்பூர்: சென்னையின் வளர்ச்சிக்காக பாடுபடு வேன் என உறுதி அளித்துள்ளவருக்கே வாக்களித்தேன்.யார் ஆட்சிக்கு வந் தாலும் மாற்று கட்சியினர் மீது பழி வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள் ளக் கூடாது.மாறாக, சாலை வசதிகளை மேம்படுத்துதல், மாணவர்களுக்கு தரமான கல்வி அளித்தல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.எந்த கட்சியின் விளம்பரம் எதுவும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட நாகமங்கலம் ஊராட்சி எம்ஜிஆர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று வாக்களித்த இளம் வாக்காளர் எம்.சுமையா பானு (19), முதல் முறையாக வாக் களித்தது குறித்து சுமையா பானு கூறும்போது, “வேலையில்லாத் திண் டாட்டத்தைப் போக்க வேண்டும். முதல் முறையாக வாக்களித்ததில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு தேர்தலிலும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக் கிறேன்” என்றார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள செரியலூர் ஜமீன் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் அருள்வேந்தன் (19, பொறியியல் கல்லூரி மாணவர்), தமிழகத்தில் பொறுப் பேற்கும் முதல்வரின் முதல் கையெழுத்து முழு மதுவிலக்கு, கல்விக் கடன் தள்ளுபடி செய்வதாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்து வாக்க ளித்துள்ளேன் என்றார்.

வேலூர்

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த சவும்யா கூறும்போது, ‘ஊழ லற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்காக நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுத்து வாக்களித்துள்ளேன்’ என்றார்.

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் மேல் நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்த பி.மகாலெட்சுமி (19) என்ற மாணவி கூறும்போது, ‘நிதானமாக யோசித்து வாக் களித்தேன். மிகப்பெரிய ஜனநாயக கடமையை செய்துள்ளதாக உணர் கிறேன்’ என்றார்.

சிவகங்கை

சிவகங்கை விவசாயக் கல்லூரி மாணவி நா.அபிமதி ரத்தினம் கூறும் போது, ‘மாற்றம் வந்தே ஆகவேண்டும். மாற்றம் ஒன்றுதான் மாறாதது. கண்டிப்பாக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

குறிப்பாக விவசாயிகளுக்கு நல்ல மாற்றத்தை கொடுக்க வேண்டும். இலவசம் எனும் பெயரில் மக்களை ஏமாற்றக்கூடாது. கல்வியும், மருத்துவமும் இலவசமாக அளித்தாலே போதும். மற்ற எதற்கும் நாம் கையேந்தும் நிலை வராது’ என்றார்.

சிவகங்கை பொறியியல் பட்டதாரி க.ராஜமோகன் கூறும்போது, ‘விரல் நுனியில் வைக்கும் மை கறை மட்டுமே நம் கரங்களிலும், அரசியல்வாதிகள் விரல்களிலும் இருக்க வேண்டும். அப்பழுக்கற்ற அரசியல்வாதிகள் அரசியலுக்கு வந்தால்தான் தமிழகம் பல வகையிலும் வளர்ச்சி பெறும். கிராமங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அரசு அமைய வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x