Published : 29 Apr 2022 04:48 AM
Last Updated : 29 Apr 2022 04:48 AM

சென்னை கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் சர்வதேச தரத்தில் வடிவமைப்பு மையம்: கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு

சென்னை: ரூ.10 கோடி செலவில், சர்வதேசதரத்தில் சென்னையில் வடிவமைப்பு மையம் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுக்கு அத் துறையின் அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்துப் பேசும்போது வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

கைத்தறி ஆடைகளின் விற் பனையை அதிகரிக்க ஏதுவாக சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனங்களுடன் (நிஃப்ட்) இணைந்து ரூ.50 லட்சம்செலவில் 500 புதிய வடிவமைப்புகள் (டிசைன்கள்) உருவாக்கப்படும்.

ரூ.50 லட்சம் செலவில் அகமதாபாத் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் மூலம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் வடிவமைப்பாளர்கள் 50 பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு சரிகை ஆலையின் உள்கட்டமைப்புகள் ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டு உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும்.

ரூ.10 கோடியில்... மத்திய - மாநில அரசுகளின் நிதி மற்றும் தனியாருடன் இணைந்துரூ.10 கோடி செலவில் சென்னை யில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் சர்வதேச தரத்தில் வடிவமைப்பு நிலையம் உருவாக் கப்படும்.

சாதாரண விசைத்தறிகளில் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் 5 ஆயிரம் விசைத்தறி களில் மின்னணு பலுகைகள் பொருத்த 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். தேசிய கைத்தறி வளர்ச்சி திட்டத்தின்கீழ், 1,377 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.1 கோடியே 58 லட்சம் செல வில் தறிகள், உபகரணங்கள், தறிக்கூடங்கள் வழங்கப்படும்.

ரூ.10 கோடி செலவில் தமிழ கத்தில் உள்ள கைத்தறிகள் மற்றும் விசைத்தறிகளை கணக் கெடுப்பு செய்து புவிசார் மூலம் அடையாளப்படுத்தப்படும்.

கைத்தறிகளுக்கான பிரத்யேக சந்தைப் பிரிவை உருவாக்கி, விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் ‘ஹேண்ட்லூம்ஸ் ஆஃப் இந்தியா’ என்ற பெயரில் கைத்தறி விற்பனை இணைவு அங்காடி ரூ.10 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.

துணிநூல் துறை: தமிழகத்தில் ஆட்டோ மொபைல், பாதுகாப்பு மற்றும் விளையாட்டுத் துறைகளின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு அதன் தொடர்புடைய ஜவுளிகளின் உற்பத்தியில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும் அத்துறைகளுக்கு தேவையான தயாரிப்புகளை உற்பத்தி செய்ய முன்வரும் தொழில்முனைவோர்களை ஊக்கு விக்கவும் நிதியுதவி அளிக்கப்படும்.

தொழில்நுட்ப ஜவுளி உற்பத்திக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகள் மேற்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படும். ரூ.1 கோடியில் சென்னையில் ஜவுளி நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு மற்றும் விரிவான செயல்திட்டம் தயாரிக்கப்படும். ரூ.1 கோடி செலவில் துணிநூல் துறைக்கென தனி இணைய தளமும், தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்படும்.

கதர், கிராமத்தொழில்கள் துறை வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா தச்சு கருமார அலகில் ரூ.95 லட்சம் செலவில் கதர் கிராமப்பொருட்கள் மற்றும் பனை பொருட்களுக்கான விற்பனை காட்சிக்கூடம் அமைக்கப்படும்.

சிவகங்கை மாவட்டம் கண்ட னூர் குளியல் சோப்பு அலகில், ரூ.3 லட்சம் செலவில் திரவ சலவை சோப்பு உற்பத்தி தொடங்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அம்சி தேன் பதப்படுத்தும் நிலையத்தில் ரூ.15 லட்சம் செலவில் தேன் பரிசோதனைக் கூடம் நிறுவப்படும்.

மண்பாண்டங்கள் மற்றும் பீங்கான் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆண்டு தோறும் விற்பனைக் கண்காட்சி நடத்தப்படும்.

ரூ.30 லட்சம் செலவில், 10 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் பனை பொருள் விற்பனைக் கூடங்கள் அமைக் கப்படும்".இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x