Published : 29 Apr 2022 04:58 AM
Last Updated : 29 Apr 2022 04:58 AM

சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அதிமுக திகழும்: இஃப்தார் நிகழ்ச்சியில் இபிஎஸ் உறுதி

அதிமுக சார்பில் சென்னை மயிலாப்பூர், நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் நேற்று நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி, ஷியா பிரிவு ஹாஜி தெஹடியான், சன்னி பிரிவு கரீம் கனி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.படம்: ம.பிரபு

சென்னை: மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகியோர் வழியில் சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அதிமுக தொடர்ந்து திகழும் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னைமயிலாப்பூர் நியூ உட்லண்ட்ஸ்ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். அதன்பின் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் அமர்ந்து நோன்பு கஞ்சி அருந்தினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கே.பழனிசாமி பேசியதாவது: "இந்திய அரசியல் இயக்கங்களில் அதிமுகதான் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை முதன்முதலில் சொந்தச் செலவில் தொடங்கி அதை தொடர்ந்து செய்து வருகிறது.

நம்நாட்டில் அனைத்து மதங் களுக்கும் அதற்குரிய இடம் அளிக்கப்பட வேண்டும். ஒரு மதம் மற்றொன்றின் கோட்பாடுகளின் வழியில் குறுக்கிடக்கூடாது. அதே போல், பெரும்பான்மையின மக்கள் பெறும் அனைத்து சலுகைகளும், உரிமைகளும், சிறுபான்மைஇனத்தவருக்கும் கிடைக்க வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கும் திட்டம், ஹஜ் பயண மானியம் ரூ.12 கோடியாக அதிகரிப்பு, உலாமாக்கள் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்வு உட்பட பல்வேறு நலத்திட்டங்களை முஸ்லிம் மக்களுக்கு அதிமுகஆட்சிக்காலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், சிறுபான்மை மக்கள் நலன் தொடர்பாக என்றைக்குமே அதிமுக இரட்டை வேடம் போட்டதில்லை. பாசம்,ஒழுக்கத்தைத் தாண்டி நியாயத்தால்தான் இறைவனின் கரு ணையை நாம் பெற முடியும்.

மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர்வழியில் அதிமுக தொடர்ந்து சிறுபான்மையினரின் பாதுகாவலனாக திகழும்" இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x