Published : 29 Apr 2022 06:51 AM
Last Updated : 29 Apr 2022 06:51 AM

கோவையில் அறுவை மனைக்கு கொண்டு வரப்பட்ட கன்றுக்குட்டிகள் மீட்பு

கோவை சத்தி சாலை மாடு அறுவை மனைக்கு வாகனங்களில் மாடுகளுக்கு இடையே கொண்டு வரப்பட்ட கன்றுக்குட்டிகள். படம்: ஜெ.மனோகரன்

கோவை: கோவை சத்தி சாலை, ஆம்னி பேருந்து நிறுத்தம் அருகே மாடு அறுவை மனை உள்ளது. இங்கு நேற்று வழக்கம் போல, வியாபாரிகள் மாடுகளை அறுவைக்காக வாகனங்களில் கொண்டு வந்தனர். அப்போது இரண்டு வாகனங்களில் மாடுகளுக்கு இடையே 10-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கன்றுக் குட்டிகளும் இருந்ததைப் பார்த்த ஒரு தரப்பினர், அறுவைக்கு மாடுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது, கன்றுக்குட்டிகள் அனுமதிக்கப் படவில்லை.

எனவே, தடையை மீறி கன்றுக்குட்டிகள் கொண்டு வரப்பட்டதாக கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ரத்தினபுரி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இரண்டு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை கூறினர். இதைத் தொடர்ந்து போலீஸார் கன்றுக்குட்டிகளை மீட்டு பல்லடத்தில் உள்ள கோ-சாலைக்கு அனுப்பி வைத்தனர். மாடுகளை மட்டும் அறுவைமனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x