விழுப்புரம் | டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

மரக்காணம் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்.
மரக்காணம் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்.
Updated on
1 min read

விழுப்புரம்: டால்பின்கள் வழக்கமாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சென்னை, மாமல்லபுரம், விழுப்புரம் மாவட்ட கடற்பகுதியில் தென்படும். இந்த நிலையில் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பம் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் டால்பின் கரை ஒதுங்கியது. சுமார் 7 அடி நீளமும், 250 கிலோ எடையுடையதாக இருந்தது. கப்பல் அல்லது படகுகளின் அடிபட்டு இறந்திருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர். இறந்த டால்பினை மரக்காணம் வனத்துறையினர் கைப் பற்றி கடற்கரையில் புதைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in