மாணவரை தாக்கிய பேருந்து ஓட்டுநர்: சாணார்பட்டி காவல் நிலையம் முற்றுகை

சாணார்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பள்ளி மாணவர்கள்.
சாணார்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பள்ளி மாணவர்கள்.
Updated on
1 min read

நத்தம்: சாணார்பட்டி அருகே பள்ளி மாணவரை தாக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் சாணார்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார் பட்டியை சேர்ந்த ரமகத்அலி மகன் முகமதுயாசின். தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் பள்ளி செல்வதற்காக சாணார்பட்டியில் இருந்து அரசு பேருந்தில் நேற்று காலை பயணம் செய்தார்.

பேருந்தை திண்டுக்கல் மேட்டுப் பட்டியைச் சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டிச் சென்றார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஓட்டுநர் சங்கர் மாணவர்களை தகாத வார்த்தைகளைக் கூறி குச்சியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் மாணவர் முகமதுயாசின் காயமடைந்தார். இவரை சிகிச்சைக்காக கொசவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

இதையடுத்து அரசு பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் சாணார்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி மாணவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in