Published : 29 Apr 2022 06:18 AM
Last Updated : 29 Apr 2022 06:18 AM

தேரோட்டத்துக்கு 15 நாட்களுக்கு முன் எங்களை அணுகுங்கள்: திருவிழா ஏற்பாட்டாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்

திருநெல்வேலி: கோயில் திருவிழா தேரோட்டத்துக்கு 15 நாட்களுக்குமுன் மின்வாரியத்தை அணுகி உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள திருவிழா ஏற்பாட்டாளர்களை மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக திருநெல்வேலி மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் கி. செல்வகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேர்த்திருவிழா காலங்களில் தேரோட்டத்தின்போது தேரோடும் வீதிகளில் மின்சாரத்தை நிறுத்தவும், தேரோட்டத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பிகளை அகற்றி பாதுகாப்பாக தேரோட்டம் நடைபெறுவதை உறுதி செய்யவும், தேரோட்டம் நடைபெறும் தினத்து க்கு 15 நாட்களுக்கு முன்ன தாகவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தை அணுகி உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.

தேரோட்டத்தின்போது சம்பந்தப்பட்ட தேர் அல்லது சப்பரத்தில் ஜெனரேட்டர் மூலம் அலங்கார விளக்கு அமைத்தால் அதற்கு தகுந்த மின் கசிவு தடுப்பு கருவி பொருத்தி அலங்கார விளக்குகளுக்கு இணைப்பு கொடுக்க வேண்டும்.

தேர் அமைக்கும்போது உலோகத்தால் ஆன கட்டுமானத் துக்கு பதிலாக காய்ந்த மரக் கட்டைகளில் அமைப்பது பாதுகாப்பானதாக இருக்கும். தேரின் உயரமானது அதன் அடிப்பாகத்தின் நீள, அகலத்துக்கு தகுந்தாற்போல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தேரோட்டத்தின்போது தீயணைப்பு மற்றும் முதலுதவி போன்ற அனைத்து முன்னேற்பாடுகளும் செய்துகொள்ள வேண்டும்.

இந்த பாதுகாப்பு வழிமுறை களை திருவிழா கமிட்டியினர் முன்ன தாகவே செய்து பாதுகாப்பாக திருவிழாக்களை கொண்டாடலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x