

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பாமகதலைவர் ஜி.கே.மணி, ‘‘தருமபுரி நகராட்சியுடன் பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.திருவண்ணாமலையை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என அதிமுக உறுப்பினர் சுந்தர்ராஜன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்து நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: தற்போது 90-க்கும் மேற்பட்டபேரூராட்சிகளை உருவாக்கும் கருத்துரு அரசின் பரிசீலனையில்உள்ளது. எந்தெந்த ஊராட்சிகளைபேரூராட்சிகளுடன் இணைக்கலாம், பேரூராட்சிகளை நகராட்சிகளுடன் இணைக்கலாம்,மாநகராட்சியாக தரம் உயர்த்தலாம் என்பது குறித்து ஆய்வுசெய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது ஊராட்சிகளை தவிர்த்து பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தை அமல்படுத்தும் வகையில் ரூ.100 கோடிஒதுக்கப்பட்டு, முதல்கட்டமாக24 பேரூராட்சிகள், 3 நகராட்சிபகுதிகளில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.