

தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட தஞ்சை மற்றும் அரவக்குறிச்சியில் பணப் பட்டுவாடா குறித்து விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக் கான பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி நடந்தது. முன்னதாக, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை ஆகிய தொகுதிகளில் வாக் காளர்களுக்கு பணம் கொடுக்கப் பட்டதாக தேர் தல் ஆணையத்துக்கு தகவல் சென்றது. பணம் கொடுக்கப்பட்ட விதம் தொடர்பாக, தேர்தல் பார்வையாளர்கள் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் புகார் அளித்தனர்.
அந்த புகார் அடிப்படையில் இரு தொகுதிகளிலும் தேர்தலை நிறுத்தி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த 2 தொகுதிகளிலும், மே 23-ம் தேதி வாக்குப் பதிவு நடக்கும் என்றும், மே 25-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்றும் அறிவித்தது. இதனால், 232 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
இந்நிலையில் அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் பணப் பட்டுவாடா தொடர்பாக விசாரணை நடத்தும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
இந்த தொகுதிகளில் பெரிய அளவில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள், உள்ளிட்டவை எவ் வாறு கொடுக்கப்பட்டன என்பதை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. இந்த குழுவில் பொது, செலவினம் மற்றும் காவல்துறை பார்வையாளர் இடம் பெற்றிருப்பர். 4-வதாக வருமான வரித்துறை இயக்குநர் ஒருவரும் இடம் பெற்றிருப்பார். இக்குழுவின் விசாரணைக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஆகியோர் தேவை யான உதவிகளை அளிக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 19-ம் தேதி மாலை 4 மணிக்குள் விசா ரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப் பட்டுள்ளது. குழுக்களின் அறிக்கை அடிப்படையில் விரைவில் அடுத்த கட்ட நடவடிக் கையை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.
இவ்வாறு லக்கானி தெரி வித்தார்.