

பொள்ளாச்சி அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், பொள்ளாச்சியை அடுத்த குள்ளக்கப்பாளையம் ஊராட்சித் தலைவர் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
குள்ளக்கப்பாளையம் ஊராட்சித் தலைவராக இருப்ப வர் வி.மனோகரன். இவர் தமிழ்நாடு கோ-ஆப்டெ க்ஸ் தலைவராகவும் உள் ளார். இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்ப தற்கு பணம் பதுக்கி வைக்கப் பட்டு இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், துணை வட்டாட் சியர் துரைசாமி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமானவரித் துறை அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர். இரண்டு மணி நேரத்துக் கும் மேல் நடைபெற்ற சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.