

மதுரை: முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை ஒட்டி கிடா முட்டு சண்டை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக உயர் நீதி மன்றத்தில் அரசுத் தரப்பில் தெரி விக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் காரி யாபட்டியைச் சேர்ந்த கோபால், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
முன்னாள் முதல்வர் கரு ணாநிதியின் பிறந்த நாளில் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளையும் ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் கருணாநிதியின் பிறந்த நாளை யொட்டி மே 28-ம் தேதி கிடா முட்டுச் சண்டை நடத்த அனுமதி கோரி ஆவியூர் காவல் நிலையத்தில் மனு அளித்தோம். காவல் ஆய்வாளர் இதுவரை அனுமதி தரவில்லை. எனவே, மே 28-ம் தேதிி ஆவியூர் அய்யனார் கோயில் அருகே கிடா சண்டை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், கிடா சண்டைக்கு அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் தேவைப்பட்டால் மீண்டும் ஆவியூர் காவல் நிலை யத்தில் மனு கொடுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.