Published : 04 May 2016 08:37 AM
Last Updated : 04 May 2016 08:37 AM

புகார்களை தெரிவிக்க தேர்தல் பார்வையாளர்களை எப்போது, எங்கே சந்திக்கலாம்?

சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதி களில் தேர்தல் பணிகளை பார்வையிட 8 மத்திய பொதுப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்களும் அரசியல் பிரமுகர்களும் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா நகர், விருகம்பாக்கம் தொகுதிக்கான பார்வையாளர் சஜிதா இஸ்லாம் ரஷித்தை காலை 9 முதல் 10.30 மணி வரையிலும், ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளின் பொதுப் பார்வையாளர் அஜோய் சர்மாவை காலை 10 முதல் 12 மணி வரையிலும், கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகளுக்கு ராணி ஜார்ஜ் மற்றும் ராயபுரம், துறைமுகம் தொகுதிகளுக்கு ஸ்வரூப் குமார்பால் ஆகியோரை மாலை 5 முதல் 6 மணி வரையிலும், திரு.வி.க நகர் (தனி), எழும்பூர் (தனி) தொகுதிகளுக்கு டொமா ஷெரிங் ஷெர்பா, சைதாப்பேட்டை, தி.நகர் தொகுதிகளுக்கான பார்வையாளர் ஜோதி புத்தா பிரகாஷ், மயிலாப்பூர், வேளச்சேரி தொகுதிகளுக்கு சாங்டிங்ளியானா ஆகியோரை மாலை 4 முதல் 5 மணி வரையிலும் சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்தில் சந்திக்கலாம்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கான பார்வையாளர் பெலாட்டி பெர்டினை மாலை 4 முதல் 5 மணி வரை திருவல்லிக்கேணியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் ஆயிரம் விளக்கு தொகுதிக்கான பார்வையாளர் பெலாட்டி பெர்டினை காலை 11 முதல் 12 மணி வரை நுங்கம்பாக் கத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் (மண்டல அலுவலகம்-9) சந்தித்து தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x