

சென்னை: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் இன்று நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் சசிகலா பங்கேற்கிறார். இதற்காக, அவர் நேற்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றார். பின்னர், அங்கிருந்து காரில் நாகூர் சென்றடைந்தார்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சசிகலா சந்தித்தார். அப்போது, அவரது அரசியல் பயணம், அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கு ஆகியவை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த சசிகலா, “விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளேன். அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நிச்சயம் விரைவில் மேல்முறையீடு செய்வேன்” என்றார்.