சென்னையில் உறைவிடப் பள்ளி விரைவில் தொடக்கம்

சென்னையில் உறைவிடப் பள்ளி விரைவில் தொடக்கம்
Updated on
1 min read

மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மாநகராட்சி உண்டு உறை விடப் பள்ளிகள் சென்னையில் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

சென்னை மாநகராட்சியின் 32 மேல்நிலைப் பள்ளிக ளிலும் உண்டு உறைவிடப் பள்ளி அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக சைதாப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புல்லா அவென்யூ பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆகிய பள்ளிகளில் இதனை தொடங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

ஏற்கெனவே இருக்கும் பள்ளி கட்டிடங்களின் மீது விடுதிகள் கட்டப்பட உள்ளன. இங்கு மாணவர்களுக்கான தங்கும் வசதி, உணவு வசதி அனைத்தும் மாநகராட்சியால் செய்யப்படுகிறது. இந்த விடுதிகளுக்கான காப்பாளர் களும் நியமிக்கப்பட உள்ளனர்.

அனைத்து மாணவர்க ளுக்கும் இது கட்டாயம் இல்லை என்றபோதிலும் பலர் இந்த விடுதியில் தங்க முன்வருவார்கள் என்று மாநகராட்சி எதிர்பார்க் கிறது.

இது குறித்து மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் மாநகராட்சி கல்வித் துறை அதிகாரிகள் பேசவுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in