தென்மாவட்டங்களில் வெற்றி: ராமதாஸ் நம்பிக்கை

தென்மாவட்டங்களில் வெற்றி: ராமதாஸ் நம்பிக்கை
Updated on
1 min read

தேர்தல் பிரச்சாரத் துக்காக தூத்துக்குடி வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: திமுக, அதிமுகவை அகற்ற தகுதியான ஒரே கட்சி பாமகதான். தென்மாவட்டங்களில் பாமகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நல்ல திட்டங்களை வைத்திருக்கின்ற, முன்னேற்றத்தை சொல்லுகின்ற பாமகவுக்கு மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவு இருக்கிறது. திமுக, அதிமுக கட்சிகளின் ஊழல் பற்றி பேச எனக்கு 5 நாட்கள் வேண்டும்.

ஊழல் அதிகாரிகள் சிலரை தேர்தல் ஆணையம் மாற்றி யுள்ளது. இன்னும் நிறைய ஊழல் அதிகாரிகள் உள்ளனர். இந்த அதிகாரிகளை ஒட்டுமொத்தமாக மாற்றி விட்டு புதிய அதிகாரிகளை நியமித்தால் தான் சுதந்திரமான நேர்மையான தேர்தல் நடக்கும் என்றார் ராமதாஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in