கருணாநிதி பிறந்த நாளை 'மாநில சுயாட்சி நாள்' ஆக அறிவிக்க வேண்டும்: திருமாவளவன்

தொல்.திருமாவளவன் | கோப்புப் படம்.
தொல்.திருமாவளவன் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: "மாநில உரிமைகளுக்காகப் போராடிய மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை 'மாநில சுயாட்சி நாள்' அல்லது 'மாநில உரிமைகள் நாள்' என அறிவிக்க வேண்டும்" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜூன் 03 அன்று முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படுமென இன்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வரவேற்கிறோம்.

தமிழ், தமிழர், தமிழ்நாடு நலன்களுக்காக தனது இறுதிமூச்சு வரையில் பாடாற்றிய கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாளை அரசே கொண்டாடுவது அவருக்குச் செலுத்தும் நன்றியறிதலாகும். அரசியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட பன்முகத் திறன்கொண்ட கலைஞரின் பங்களிப்புகளிலேயே போற்றுதலுக்குரியது மாநில உரிமைகளுக்காக அவர் நடத்திய போராட்டங்களேயாகும்.

எனவே, மாநில சுயாட்சி உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக இந்தியாவிலேயே முதன் முதலில் போர்க்குரல் எழுப்பிய கருணாநிதியின் பிறந்தநாளை 'மாநில சுயாட்சி நாள்' அல்லது 'மாநில உரிமைகள் நாள்' என அறிவித்துக் கொண்டாட வேண்டுமென முதல்வரை விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in