80 நாட்களுக்கு பிறகு மக்களிடம் குறை கேட்டார் மேயர் சைதை துரைசாமி
தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததால், சென்னை மேயர் சைதை துரைசாமி, தனது அலுவலகத்தில் நேற்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 4-ம் தேதி வெளியானது. அன்று முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள மேயர், துணை மேயர், நிலைக்குழுத் தலைவர்கள் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டதால் கடந்த 20-ம் தேதி அலுவலக அறைகள் திறக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், நேற்று மாநக ராட்சி அலுவலகத்துக்கு வந்த மேயர் சைதை துரைசாமி, 80 நாட்களுக்கு பிறகு பொதுமக் களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். கட்சியினர் பலரும் மேயரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
ஆணையர் சந்திப்பு
மேயர் சைதை துரைசாமியை, அவரது அறையில் மாநகராட்சி ஆணையர் பி.சந்தரமோகன் நேற்று சந்தித்தார். அப்போது, மாநகராட்சியில் மேற்கொள்ளப் பட்டு வரும் பணிகள், அடுத்த மன்ற கூட்டம் நடத்துவது, அதில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.
