Published : 26 Apr 2022 06:10 AM
Last Updated : 26 Apr 2022 06:10 AM
கோவை: கோவை வடவள்ளியை சேர்ந்தவர் பிரதீஷ். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிவரும் மனைவி சுகன்யா(35), வடவள்ளியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். இவர்களது மகன் லக்சன்(11) தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு எதிரே உள்ள பூங்காவுக்கு லக்சன் விளையாடச் சென்றார். அப்போது பூங்கா வளாகத்தில் கவனிப்பாரற்று கிடந்த மின் வயரை சிறுவன் மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் லக்சனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, லக்சன் உயிரிழந்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக, உறவினர் மங்கலேஸ்வரன் வடவள்ளி போலீஸில் புகார் அளித்ததார். அதில், “அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தினர் மற்றும் பூங்காவை ஏற்படுத்திய கட்டிடதாரர்கள் அதை முறையாக பராமரிக்காததும், சரியான முறையில் வேலை நடக்காததுமே லக்சன் உயிரிழப்புக்கு காரணம்” எனக் கூறியிருந்தார். இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கூறும்போது, ‘சிறுவன் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT