பள்ளி பொருட்கள் விற்பனை மந்தம்: தூத்துக்குடி வியாபாரிகள் கவலை

பள்ளி பொருட்கள் விற்பனை மந்தம்: தூத்துக்குடி வியாபாரிகள் கவலை
Updated on
1 min read

பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் புத்தக பை போன்ற பள்ளி பொருட்களின் விற்பனை இன்னும் விறுவிறுப்படையவில்லை.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படுகின்றன. இதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை போன்ற நடவடிக்கைகள் தீவிர மடைந்துள்ளன.

சூடுபிடிக்கவில்லை

மாணவ, மாணவியர் புதிய கல்வியாண்டில் பள்ளிகளுக்கு செல்லும் போது புதிய புத்தக பை, சாப்பட்டு பை, புதிய தண்ணீர் பாட்டில், பேனா, பென்சில் போன்ற பொருட்களுடன் செல்ல ஆசைப்படுவது வழக்கம். இதனால் பெற்றோர் பள்ளிகள் திறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பே குழந்தைகளுக்கு தேவை யான பள்ளி பொருட்களை வாங்கத் தொடங்கிவிடுவர்.

ஆனால் இந்த ஆண்டு பள்ளி திறக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையிலும் பள்ளி பொருட்களின் விற்பனை இன்னும் சூடுபிடிக்கவில்லை. தூத்துக்குடி மாநகரில் உள்ள கடைகளில் ஏராளமான பள்ளி பொருட்களை வாங்கி வைத்துள்ளனர். ஆனால், விற்பனை விறுவிறுப்பில்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள சுதா நாவல்டி உரிமையாளர் எஸ். முருகேசன் கூறும்போது, ‘கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு விற்பனையில் மந்த நிலை காணப்படுகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் தான் இதற்கு காரணம் என நினைக்கிறேன். வெயிலின் கொடுமையால் மக்கள் வெளியில் நடமாடவே அஞ்சுகின்றனர்.

மும்பையில் இருந்து ஏராளமான புதிய வடிவங்களில் பொருட்களை வாங்கி வைத்துள்ளோம். சனி, ஞாயிறு மற்றும் அடுத்து வரும் இரு நாட்களும் விற்பனை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

புது வரவுகள்

மழை கவரோடு வந்துள்ள புத்தக பைகள் மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. புத்தக பைகள் ரூ.250 முதல் ரூ.3000 வரை உள்ளன. அதுபோல சாப்பாட்டு பைகள் ரூ. 60 முதல் ரூ. 200 வரை உள்ளது. லஞ்ச் பாக்ஸ் ரூ. 50 முதல் ரூ. 700 வரை உள்ளது.

தண்ணீர் பாட்டில் பல்வேறு வடிவங்களில், நிறங்களில் வந்து ள்ளன. இவை ரூ. 25 முதல் ரூ. 250 வரையிலான விலையில் கிடைக் கின்றன. பென்சில் பாக்ஸ் ரூ. 10 முதல் ரூ. 350 வரை உள்ளன. பவுச் ரூ.10 முதல் ரூ. 250 வரை பல வடிவங்களில் உள்ளன’ என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in