

அதிகாரிகள் தங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என சுயேச்சை வேட்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வரும் 16-ம் தேதி நடைபெற வுள்ள சட்டப்பேரவைத் தேர்த லில் அனைத்து தொகுதி களிலும் அரசியல் கட்சிகளின் வேட் பாளர்களைவிட சுயேச்சைகள் அதிக அளவில் களத்தில் உள்ளனர். சுயேச்சை வேட்பாளர் களை அதி காரிகள் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டி யிடும் சுயேச்சை வேட்பாளர் ஆர்.சரவணப்பெருமாள் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
தேர்தல் நடத்தும் பணியில் உள்ள அதிகாரிகள் சுயேச்சை வேட்பாளர்களை ஒரு பொருட் டாகவே மதிப்பதில்லை. வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாள ரின் பெயர், சின்னம் பதிக்கப்படும் தகவலைக் கூட எங்களுக்கு தாமதமாக தெரிவிக்கின்றனர். அப்படியே சென்றாலும் சரியான தகவல்களைக் கூறாமல் அலைக் கழிக்கின்றனர். இது தொடர்பாக தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் அளித்தும் பலனில்லை.
தேர்தல் ஆணையம் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்குவதில்லை. வேட்பாளர்கள் பூத் சிலிப் வழங்கக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பூத் சிலிப் வழங்குவதை அதி காரிகள் தடுப்பதில்லை. இதுபற்றி கேட்டால் கட்சி சின்னம் இல் லாமல் பூத் சிலிப் வழங்கலாம் என அதிகாரிகளே கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.